Categories: இந்தியா

இரண்டு முறை தகுதி நீக்கம்! லட்சத்தீவு எம்பி முகமது பைசலுக்கு மீண்டும் எம்பி பதவி!

Published by
பாலா கலியமூர்த்தி

இரண்டு முறை தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சத்தீவு எம்பி முகமது ஃபைசலுக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கி மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி முகமது ஃபைசலுக்கு அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனால் முகமது ஃபைசலின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து முகமது ஃபைசல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், ரத்து செய்தது.  இதன் காரணமாக மீண்டும் எம்பி பதவி வழங்கி உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்தது.

பாகிஸ்தானில் பரபரப்பு! குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பலி 21 பேர் படுகாயம்!

அப்போது, முகமது ஃபைசல் மீதான தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டதால் இரண்டாவது முறையாக அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முகமது ஃபைசல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவால், தகுதி நீக்கத்தை ரத்து செய்து, முகமது பைசலுக்கு மீண்டும் லட்சத்தீவு எம்பி பதவி வழங்கி மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதனால், கொலை முயற்சி வழக்கில் இரண்டு முறை தகுதி நீக்கம் செய்யப்பட்ட முகமது ஃபைசல் மீண்டும் லட்சத்தீவு எம்பி ஆனார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அதெல்லாம் முடியாது” மத்திய அரசு கண்டிஷன்! பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்!“அதெல்லாம் முடியாது” மத்திய அரசு கண்டிஷன்! பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்!

“அதெல்லாம் முடியாது” மத்திய அரசு கண்டிஷன்! பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்!

சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.…

21 minutes ago
150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை – மீட்புப் பணிகள் தீவிரம்!150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை – மீட்புப் பணிகள் தீவிரம்!

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை – மீட்புப் பணிகள் தீவிரம்!

ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில்…

1 hour ago
Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!

Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…

2 hours ago

மகளிர் 2வது ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…

2 hours ago

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…

3 hours ago

சிக்னல் கோளாறு… சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…

3 hours ago