இரண்டு முறை தகுதி நீக்கம்! லட்சத்தீவு எம்பி முகமது பைசலுக்கு மீண்டும் எம்பி பதவி!

Mohammed Faizal

இரண்டு முறை தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சத்தீவு எம்பி முகமது ஃபைசலுக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கி மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி முகமது ஃபைசலுக்கு அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனால் முகமது ஃபைசலின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து முகமது ஃபைசல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், ரத்து செய்தது.  இதன் காரணமாக மீண்டும் எம்பி பதவி வழங்கி உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்தது.

பாகிஸ்தானில் பரபரப்பு! குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பலி 21 பேர் படுகாயம்!

அப்போது, முகமது ஃபைசல் மீதான தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டதால் இரண்டாவது முறையாக அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முகமது ஃபைசல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவால், தகுதி நீக்கத்தை ரத்து செய்து, முகமது பைசலுக்கு மீண்டும் லட்சத்தீவு எம்பி பதவி வழங்கி மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதனால், கொலை முயற்சி வழக்கில் இரண்டு முறை தகுதி நீக்கம் செய்யப்பட்ட முகமது ஃபைசல் மீண்டும் லட்சத்தீவு எம்பி ஆனார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்