உத்திர பிரதேசத்தில் கங்கை நதியில் உள்ள காவி துணிகள் அகற்றம்…!
உத்திர பிரதேசத்தில் கங்கை நதியில் உள்ள காவி துணிகள் அகற்றம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக உத்திரப்பிரதேசத்தில், கங்கை ஆற்றில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுவதாக தெரிவிக்கப்பட்டது இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், கங்கை நதியில் இறந்தவர்கள் உடலை வீசப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை பயன்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கங்கை நதிக்கரையில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களின் புகைப்படங்கள் உத்தரப் பிரதேச அரசின் மீதான விமர்சனங்களை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பிரக்யாராஜ் மாவட்ட நிர்வாகம் சமாதிகள் மேல் பொருத்தப்பட்டுள்ள காவி துணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.