#BREAKING: தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கம் – டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம் ..!
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகள் குறித்து டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம் கொடுத்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து தமிழ் பட்டியலின எழுத்தாளர்கள் பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பேரில் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாய் இன் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் உட்பட பல தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதில், படைப்பாளிகளின் சாதி, மதம் மொழி பின்புலத்தை வைத்து டெல்லி பல்கலைக்கழகம் செயல்படுவதில்லை. ஒருதலைபட்சமாகவும் இருக்கக்கூடாது. பாடப் பிரிவுகளை நீக்கியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. மொழிப்பாடத்தில் இருக்கக்கூடிய பாடத்திட்டம் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. தனி மனிதர் ஒரு சமூக அமைப்பின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.