உயரதிகாரியின் முன் அனுமதியின்றி தாடிவளர்த்த காவலர் பணியிடை நீக்கம்.
உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் ரமலா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் இந்திஜார் அலி. இவர் உயரதிகாரியின் முன் அனுமதியின்றி தாடி வளர்த்துள்ளார். எனவே,அவரை தாடியை மழிக்கும்படி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். ஆனால் 3 முறை கூறியும் உயரதிகாரியின் உத்தரவை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஒழுங்கீன நடவடிக்கையாக கடந்த 20ந்தேதி இந்திஜார் அலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக இது விவாத பொருளாக இருந்து வந்தது.
இந்நிலையில், அலி தனது தாடியை மழித்து உள்ளார். இதுபற்றி தனது உயரதிகாரியிடம் விண்ணப்பம் வழியே இந்த தகவலை தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, அவரை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதன்பின்பு அவர் மீண்டும் தன்னுடைய பணியில் சேர்ந்துள்ளார்.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…