டூல்கிட் வழக்கு : திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி ட்விட்டரில் விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவை திரட்டும் வகையில் ‘டூல்கிட்’டை தயாரித்ததாக டெல்லி போலீசார் புகார் தெரிவித்தனர். திஷா ரவி இந்தியாவின் மதிப்பை கெடுக்கும் வகையில் ‘டூல்கிட்’டை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்தார் என கூறி டெல்லி போலீசார் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, திஷா ரவியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அந்த காலக்கெடு முடிந்த நிலையில் மீண்டும் திஷா ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று மூன்று நாள் காவல் முடிந்ததும் திஷா ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் மேலும் 5 நாள்கள் விசாரணை நடத்த அனுமதி கோரிய நிலையில், ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதற்கிடையில் திஷா ரவி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீது இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதாவது ,திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.இரு நபர் உத்தரவாதத்துடன் தலா ரூ.1 லட்சம் செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025