தேர்தலில் நிற்க சீட் இல்லை… அதிருப்தியில் விஷம் குடித்த காங்கிரஸ் பிரமுகர்.!

Congress Person Balaraju

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக 119 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் வேலைகளை ஆளும் பிஆர்எஸ் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட இதர கட்சியில் தீவிரமாக ஆரம்பித்து உள்ளன.

கடந்த இரண்டு முறை எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியானது இந்த முறை ஆட்சியை கைப்பற்ற கடுமையாக வேலை செய்து வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் வெளியிடபட்டு வருகிறது.

மிசோரமில் இந்த வாக்குச்சாவடிக்கு மீண்டும் வாக்குப்பதிவு..!

பான்ஸ்வாடா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2014 மற்றும் 2018 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர் பாலராஜு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டியிடம் தோல்வியடைந்தார். அவருக்கு இந்த முறை காங்கிரஸ் தலைமை சீட் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக பாஜக பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்எல்ஏவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மனம் வருந்திய காங்கிரஸ் பிரமுகர் பாலாராஜு விஷம் அருந்தினார். தற்போது நிசாமாபாத் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்