ஜி20 மாநாட்டில் கிரிப்டோகரன்சி குறித்த விவாதங்கள்.? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.!
ஜி20 மாநாட்டில் கிரிப்டோகரன்சி குறித்த விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியா தலைமையில் ஜி20 மாநாடு கூட்டமைப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஜி20 மாநாட்டில் மற்ற நாடுகளின் நிதிநிலை பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி அபாயம் :
அவர் கூறுகையில், உலகளாவிய கிரிப்டோ சந்தையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வீழ்ச்சியை அடுத்து, கிரிப்டோகரன்சிகளுடன் தொடர்புடைய அபாயங்களை சமாளிக்க அனைத்து நாடுகளுக்கும் பொதுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளது. என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் :
மேலும் , நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள கடன் நெருக்கடியைத் தீர்க்க அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கவும் இந்தியாவுக்கு இந்த மாநாட்டின் மூலம் வாய்ப்பு உள்ளது என்றும், அதற்கான உலகலாவிய தீர்மானங்கள் கொண்டு வர உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இலங்கை – கானா :
குறிப்பாக இலங்கை மற்றும் கானா போன்ற நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் கடன் நெருக்கடியை எதிர்கொள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்க G20 முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.இந்த, ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டமானது ஏப்ரல் 12-13 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.