விவசாயக் கடன் முழுவதும் தள்ளுபடி -உத்தவ் தாக்ரே.!
- சமீபத்தில் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான பயிர் கடன்களை தள்ளுபடி என உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
- நேற்று புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி உத்தவ் தாக்கரே, விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என கூறினார்.
மஹாராஷ்டிராவில் தற்போது சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் முதலமைச்சராக பதவியேற்று உள்ளார். சமீபத்தில் நடந்த குளிர்கால சட்டசபை கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்தது. அந்த அறிவிப்பு படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான பயிர் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் எனஅறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முழு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்குவோம் என கூறிவந்த சிவசேனா விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினர். இந்நிலையில் நேற்று புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார்.
அப்போது பேசிய உத்தவ் தாக்கரே , ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டும் என கருதி ரூ. 2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்தார்.