ஒரு மனிதன் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.அப்படி ஒருநாளுக்கு 2 லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிப்பதால் நமது உடலில் எந்தவித நோய் வராது என கூறப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சரியாக தண்ணீர் குடிப்பது இல்லை எனவும் அதனால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது.
சமீபத்தில் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தண்ணீர் குடிக்க “குடிநீர் பெல்” அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையை கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநில அரசு “குடிநீர் பெல்” முறையை அமல்படுத்த உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்படட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில் காலையில் ஒரு முறையும் பின்னர் மதிய உணவுக்கு பிறகு ஒரு முறையும் “குடிநீர் பெல்”
ஒரு நாளைக்கு 2 முறை இந்த பெல் அடிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் என 20 நிமிடம் ஒருநாளைக்கு ஒதுக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…