எம்பிபிஎஸ் போல டாக்டர்களுக்கான டிப்ளமோ படிப்பு… முன்மொழிந்த மேற்குவங்க முதல்வர்.!
மருத்துவர்களின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, டிப்ளமோ படிப்பை தொடங்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் மருத்துவர்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக மருத்துவர்களுக்கான பொறியாளர்களுக்கு இருப்பதைப் போல, மருத்துவர்களுக்கான டிப்ளமோ படிப்பைத் தொடங்க முடியுமா என்பதை ஆய்வு செய்யுமாறு சுகாதார செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாமிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறினார்.
உத்கர்ஷ் பங்களா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் மம்தா, டிப்ளமோ படிப்பின் மூலம் பல குழந்தைகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். இதுபோன்ற டிப்ளமோ படிப்புகளின் மூலம், ஆரம்ப சுகாதார பிரிவுகளுக்கு அதிகமான மருத்துவர்களை பயிற்சி அளிப்பதற்கு உள்ள சட்ட அம்சங்களை முடிவு செய்ய ஒரு குழுவை அமைக்குமாறு சுகாதார செயலாளரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
மருத்துவர்கள் தற்போது வழக்கமான எம்பிபிஎஸ் படிப்பில் ஐந்தாண்டு பாடத்திட்டத்தை முடித்து, அதன்பின் மீண்டும் ஜூனியர் டாக்டர்களாக சேர வேண்டும். இதற்கிடையில் மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்களுக்கிணையான டிப்ளமோ டாக்டர்கள் இருந்தால் நல்ல பாலன் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்புகளில் டிப்ளமோவை அறிமுகம் செய்வதன் மூலம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பற்றாக்குறையை, டிப்ளமோ முடித்தவர்களை டாக்டர்களாக பணியமர்த்தலாம் எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.