நடிகர் மற்றும் பாடகரான தில்ஜித் டோசன்ஜ், டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு குளிர்தாங்கும் ஆடைகளை வாங்க ரூபாய் 1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 12 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக டெல்லி – நொய்டா எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தைக்கு 9-ஆம் தேதி அழைப்பு மத்திய அரசு விடுத்த நிலையில், நாளை (டிசம்பர் 8 ஆம் தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பஞ்சாபிய பாடகர் மற்றும் நடிகருமான தில்ஜித் டோசன்ஜ், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு குளிர்தாங்கும் ஆடைகளை வாங்க ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நடிகர் மற்றும் பாடகரான தில்ஜித் டோசன்ஜ், கடந்த சனிக்கிழமை டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து,அதில் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் மத்திய அரசை வலியுறுத்தினார். அப்பொழுது அங்கு போராடிவரும் விவசாயிகளுக்கு குளிர்தாங்கும் ஆடைகளை வாங்க ரூபாய் 1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…