பழங்கள் வாங்க டிஜிட்டல் ரூபாய்! ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட வீடியோ.!

Default Image

டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தி ஆனந்த் மஹிந்திரா, தான் பழங்கள் வாங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 1, 2022 ஆம் தேதி மொத்த பணப்பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சில்லறை வணிகத்திற்கான டிஜிட்டல் ரூபாயும் டிசம்பர் 1 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. டிஜிட்டல் முறையில் இந்த ரூபாய்க்கு e₹-R என்ற குறியீடு வழங்கப்பட்டிருந்தது.

e-currency1

மொபைல் செயலி மூலம் இ – வாலட் முறையில் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தலாம் என்றும், டிஜிட்டல் ரூபாயை டோக்கன் வடிவில் பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிரபல தொழிலதிபரும் மஹிந்திரா கார் நிறுவனருமான ஆனந்த் மஹிந்திரா, டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தும் வீடீயோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

e currency2

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)யின் வாரியக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆனந்த் மஹிந்திரா, இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி (இ-ரூபாய்) பற்றி அறிந்ததாகவும், உடனடியாக அதைப் பயன்படுத்த தொடங்கியதாகவும் தெரிவித்தார். இந்த பரிவர்த்தனையின் வீடீயோவை பகிர்ந்து ஆனந்த் மஹிந்திரா, ஆர்பிஐயின் கூட்டத்தில் டிஜிட்டல் கரன்சி பற்றி தெரிந்து கொண்டேன்.

உடனடியாக அருகிலுள்ள பழ வியாபாரியான பச்சே லால் சஹானியிடம், இதனை பயன்படுத்தி பழங்கள் வாங்கினேன், டிஜிட்டல் இந்தியா! செயல்பாட்டில் இருப்பதாகவும் சிறந்த மாதுளை பழங்களும் கிடைத்தன என்றும் அவர் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார். அவர் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனையின் போது QR குறியீட்டை ஸ்கேன் செய்து, UPI பரிவர்த்தனை போல இந்த செயல்முறையை மேற்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்