டிஜிட்டல் பஞ்சாப்: இனி வாட்ஸ்அப்/மின்னஞ்சலில் பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறுலாம்..
பிறப்பு, இறப்பு, ஜாதி மற்றும் பிற சான்றிதழ்கள் பெற வரிசையில் நிற்கும் காலம் போய்விட்டது. இனி இந்த ஆவணங்களை வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறலாம். பஞ்சாப் அரசு 283 குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“விண்ணப்பதாரர்கள் இப்போது இந்த சான்றிதழ்களை கையொப்பத்துடன் நேரடியாக வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் பெற முடியும்” என்று நிர்வாக சீர்திருத்த அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் கூறினார். இந்தச் சேவைகள் சாதி, பிறப்பு, இறப்பு மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள், திருமணச் சேவைகள், ஆயுதங்களைப் புதுப்பித்தல் மற்றும் பிற்படுத்தப்பட்ட பகுதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.