பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 3-4 நாட்களில் தீர்வு கிடைக்கும் : அமித்ஷா.!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அடுத்த 3-4 நாட்களில் தீர்வு கிடைக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் முதல் முறையாக, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.80.11 ஆக அதிகரித்துள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.72.14 ஆக உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா தெரிவித்ததாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. எனவே அடுத்த 3 அல்லது 4 தினங்களில் விலை குறையும்.
எண்ணெய் நிறுவனங்களுடன், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அதன்பின் இப்பிரச்னையில் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.