நாட்டை பற்றி தரக்குறைவாக பேசவில்லை.. செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி விளக்கம்!

Default Image

நாளுமன்றத்தில் பேச நாளை எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறேன் என ராகுல் காந்தி விளக்கம்.

பேச அனுமதி மறுப்பு:

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாட்டை பற்றி தரைகுறைவாக எதுவும் பேசவில்லை. அதானிக்கு பிரதமர் மோடி எந்தளவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்பதை பற்றி பேசினேன். அதானி குறித்து நான் பேசியதில் ஆட்சேபத்துக்குரியது எதுவும் இல்லை. நாடாளுமன்றத்தில் எனது கருத்தை சொல்ல  உரிமை உள்ளது. ஆனால், பேச அனுமதி மறுக்கப்படுகிறது.

அவை குறிப்பில் நீக்கம்:

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அதானி விவகாரம் குறித்து பேசியது முழுவதும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மக்களவையில் பேச வாய்ப்பு கேட்டும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. லண்டனில் பேசியது குறித்து நான் முதலில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். பிரதான பிரச்சனையில் இருந்து திசை திருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது.

திசை திருப்பவே நாடகம்:

நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க சென்றேன். 4 மத்திய அமைச்சர்கள் என் மீது குற்றசாட்டுகளை கூறினார்கள். ஆனால், அவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவே விரும்புகிறேன். மக்களவை சபாநாயகரை சந்தித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டேன். மேலும், அதானி பயன்பெற வேண்டும் என்பதற்காக விதிகள் திருத்தப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றசாட்டினார். அதானி விவகாரம் பற்றி நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என்ற கோரிக்கையை திசை திருப்பவே நாடகம் அரங்கேறியுள்ளது.

ராகுல் காந்தி நம்பிக்கை:

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி, அதானி, எஸ்பிஐ உயரதிகாரி மற்றும் அந்நாட்டின் ஒரு மாநில முதல்வர் இருக்கும் புகைப்படம் பொதுவெளியில் உள்ளது. பொதுவெளியில் உள்ள ஒரு படத்தை நாடாளுமன்றத்தில் காட்டி பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். குற்றசாட்டுகளை கூறிய அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எனக்கும் அளிக்க வேண்டும். எனவே, நாளுமன்றத்தில் பேச நாளை எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்