சுஷாந்த் மரண வழக்கு: வேறு யாராவது அவரை தூக்கிலிட்டாரா? அறையில் போலி சோதனை நடத்திய சிபிஐ

Published by
Surya

சுஷாந்த்தை வேறு யாராவது தூக்கிலிட்டாரா? என சுஷாந்த் அறையில் சிபிஐ அதிகாரிகள் போலி சோதனை மூலம் ஆய்வு நடத்தி வந்தனர்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை மும்பை போலீசார் அவர் உயிரிழந்த தினம் முதல் விசாரணை நடத்தி வந்தது.

அப்பொழுது அவர்கள் அவர் தூக்கிலிடப் பயன்படுத்தபட்ட குர்தா, 200 கிலோ வரை எடையைத் தாங்கக்கூடும் என மும்பை போலீசார் கண்டறிந்தனர். இந்த வழக்கில் அவரின் காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் காவல் நிலையத்தில் சுஷாந்த்தின் தந்தை புகாரளித்தார். இதன்காரணமாக பீகார் போலீசார், தனிப்படை அமைத்து மும்பையில் விசாரணை நடத்தியது. ஆனால், மும்பை போலீசார் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பீகார் போலீசார் குற்றம்சாட்டி வந்தனர்.

மேலும் சுஷாந்த்தின் தந்தை, மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் மனு கொடுத்தார். இதனால் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிபிஐ அதிகாரிகள் மும்பையில் விசாரணையை தொடங்கினர்.

நேற்று சிபிஐ போலீசார், சுஷாந்தின் நண்பரான சித்தார்த் பிதானி மற்றும் சமையல்காரர் நீரஜிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவரின் காதலி ரியா சக்ரபர்த்தியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தவிர, சிபிஐ-யின் சிறப்பு விசாரணைக் குழு, சுஷாந்த் சிங் ராஜ்புத்தை வேறு யாராவது தூக்கிலிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என ஆய்வுகள் நடத்தி வந்தனர்.

அந்தவகையில் நேற்று சிபிஐ அதிகாரிகள், போலி சோதனை நடத்தினார்கள். போலி சோதனைக்காக தடயவியல் குழுவினர், சுஷாந்த் அறையின் வரைபடங்களை உருவாக்கினார். விசிறிக்கும் மெத்தைக்கும் இடையிலான தூரம் 5 அடி 11 அங்குலம் என்று குழு கண்டறிந்தது. மேலும், சுஷாந்தின் உயரம் 5 அடி 10 அங்குலம் என கூகுளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மெத்தையுடன் படுக்கையின் உயரமும் 1 அடி 9 அங்குலமும், மெத்தையின் உயரம் மட்டும் 8 அங்குலமும் இருந்தது. மெத்தையிலிருந்து ஸீலின்கிங் உயரம் 9 அடி 3 அங்குலமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தரையில் POP, 8 அடி 11 அங்குலம். தூக்கில் இருந் சுஷாந்தின் உடல், மொத்தம் 8 அடி 1 அங்குல சாய்வாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, நடிகரின் குளியலறை பெல்ட்டும் உடைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலி சோதனை செய்தபின், ஒரு நபர் சுஷாந்தின் படுக்கைக்கும், விசிறிக்கும் இடையில் உள்ள இடைவெளியில் தூக்கில் தொங்குவது சாத்தியம் என்பதை சிபிஐ அதிகாரிகள் கவனித்தனர். சுஷாந்த் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை தூக்கிலிட்டாரா? அல்லது அவர் மயக்கமடைந்தாரா? என அந்த குழு ஆராய்ந்து வந்தனர். அதற்கு டாக்டர் சுதிர் குப்தா மற்றும் அவரது குழுவினர், அதிகாரிகள் குடுக்கும் அறிக்கையின்படி, உள்ளுறுப்பு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்வார்கள்.

அப்பொழுது அவரின் வீட்டில் சுஷாந்தின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில், அவரின் நண்பர் நண்பர் சித்தார்த் பிதானி மற்றும் சமையல்காரர் நீரஜ் பார்க்குமாறு இருந்தது. அந்த தேதி, சுஷாந்த் உடலை பார்த்து அவர்களின் நிலைமை எப்படி இருந்தது என ஆய்வுசெய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் முரண்பாடுகள் இருந்ததால், அவர்களை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாகம் கூறப்படுகிறது. சுஷாந்த் பலமுறை அழைத்த பின்னும் கதவைத் திறக்காதபோது கதவை உடைக்க அவர்கள் ஒரு பூட்டு தொழிலாளியை வைத்து அவரின் அறையின் கதவு  உடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

6 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

6 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

6 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

6 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

7 hours ago