தமிழிசை சௌந்தரராஜன் : சமீபத்தில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொன்டு இருந்தார்கள். அப்போது மேடையில் தமிழிசை சௌந்தரராஜன் போய்க்கொண்டு இருந்த சமயத்தில் அமித் ஷா அவரை கூப்பிட்டு எதோ பேசினார்.
சற்று கோபத்துடன் அமித் ஷா பேசுவதாகவும் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்த நிலையில், பலரும் அமித் ஷா தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்ததாக கூறதொடங்கி விட்டனர். பலரும் தமிழனை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது என தங்களது கண்டனங்களை பதிவிட்டும் வந்தனர்.
இதனையடுத்து, இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அமித் ஷா என்னை மேடையில் இருக்கும்போது அழைத்து தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி கேட்டார்.
இதனை பற்றி நான் அவரிடம் விரிவாகக் பேசினேன். அப்போது நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளைத் தீவிரமாக செய்யுமாறு என்னை அறிவுறுத்தினார். தேவையற்ற வதந்திகள் பரவுவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…