“2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்”- பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என எம்.பி. சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார். இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி.யான சுப்ரமணியன் சுவாமி, தனது கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர், “தோனி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற்றுள்ளார். வேறு ஏதுலிருந்தும் இல்லை. அவர் தடைகளை எதிரத்து போராக்கூடிய திறன்கொண்ட நபர். கிரிக்கெட்டில் ஒரு அணி திறன்பட வழிநடத்திய திறமை அவரது பொது வாழ்விற்கும் வேண்டும். தோனி 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்