கொரோனா பாதிப்புக்கு தோனி ஒரு லட்சம் தான் கொடுத்தாரா.?
கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 19 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவால் குணமடைந்தவர்கள் 79 பேர் இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை சரி செய்வதற்கு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ,தொழிலதிபர்கள் என பலர் மாநில அரசின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க நிதி வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.தோனியின் இந்த உதவியை பலர் பாராட்டினாலும் சிலர் சமூக வலைத்தளங்களில் அவர் கொடுத்த தொகையை குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்திய வீரர்களை பொறுத்தவரை சச்சின் 50 லட்சமும் , கங்குலி 50 லட்சம் மதிப்பிலான அரிசியும் , பதான் சகோதரர்கள் 4000 முககவசங்களையும் அரசுக்கு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.