குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் தோனி! கரணம் என்ன?!
இந்தியா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா எனும் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஆனால், அங்கு கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டத்திற்கு செல்ல முடியவில்லை. அதனால், தோனியின் சொந்த ஊரான ராஞ்சி சென்றுள்ளார். அங்கு ராஜ்பவனில் தங்கியுள்ளார். இதனை அறிந்த தோனி ராஜ்பவனில் உள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சென்று பார்த்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ராணுவத்தில் பணியாற்றுவதற்காக ஏற்கனவே இரண்டு மாதங்கள் கிரிக்கெட் விளையாட போவதில்லை என விடுப்பில் இருந்தார். தற்போது மேலும் ஒரு மாதம் விடுப்பு எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.