வருடத்திற்கு 21 கோடி சம்பளம் வாங்கும் தர்மபால் குலாத்தி..!யார் இவர்..?
எம்டிஎச் என்ற மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தர்மபால் குலாத்தி. 94 வயதான இவர், இந்திய நுகர்பொருள் துறையில் அதிகச் சம்பளம் வாங்கு தலைமை செயல் அதிகாரி ஆவார். எம்டிஎச் மசாலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் இவர், 5 ஆம் வகுப்பை கூட தாண்டவில்லை.
5 ஆம் வகுப்பை கூட நிறைவு செய்யாத இவர் வாங்கும் ஊதியம் வருடத்திற்கு 21 கோடி ஆகும்.
ஊழியர்கள் அனைவராலும் தாதாஜீ அல்லது மஹாஷியாஜி என்று அழைக்கப்படும் குலாத்தி தினமும் நிறுவனத்தைச் சுற்றி வருவது, சந்தை விற்பனையாளர்கள் மற்றும் டீலர்களை ஞாயிற்றுக் கிழமை என்றும் பார்க்காமல் சந்தித்துப் பேசுவது போன்றவற்றைச் செய்வார்.
மேலும் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகள் இவருடைய கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது. குறைந்த விலையில் நல்ல தரமான பொருட்களை அளிப்பதே எனது நோக்கம் என்றும் என்னுடைய சம்பளத்தில் இருந்து 90 சதவீதம் அறக்கட்டளைக்கு அளிப்பதாகவும் தர்மபால் குலாத்தி கூறுகின்றார்.
கிளைகள் எம்டிஎச் நிறுவனத்திற்கு துபாய், லண்டன் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது, 100 நாடுகளுக்கும் மேலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
60-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் எம்டிஎச் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வெளிவருகின்றது. அதில் டேகி மிர்சி, சேட் மசாலா மற்றும் சன்னா மசாலா பாகெட்கள் ஒவ்வொன்றும் மாதத்திற்கும் 1 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளது. ஆனால் இன்று வரை பிற வெளிநாட்டு உணவுகளைத் தயாரித்ததில்லை.