“கொரோனா தடுப்பில் உலகிற்கே முன்மாதிரியாக அமைந்தது தாராவி”- முதல்வர் பெருமிதம்!
மக்கள் நெருக்கடி அதிகம் இருக்கும் பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதை தாராவி உலகிற்கு நிரூபித்து காட்டியதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக, மஹாராஷ்டிராவில் அதிகளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அம்மாநில தலைநகரான மும்பையில் உள்ள தாராவி எனும் பகுதி, ஆசியளவில் மிகப்பெரிய குடிசை பகுதியாகும். அங்கு முதல் கொரோனா தொற்று உறுதியான பொது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. அதற்க்கு முக்கியமான காரணம், அந்த பகுதி மிகவும் நெருக்கமான மற்றும் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியாகும்.
இதன்காரமாக, தாராவியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக பின்பற்றப்பட்டது. அதன்காரணமாக, நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 18 ஆக சரிந்தது.
தற்பொழுது அந்த எண்ணிக்கையும் சரிந்து, நாள் ஒன்றுக்கு 1 முதல் 12 வரையிலான தொற்றுகளே உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, உலக சுகாதார துறை அமைப்பிடம் “தாராவியகர்கள்” என பாராட்டை பெற்றது.
இந்நிலையில், அடர்த்தியான பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்து காட்டி, முன்மாதிரியாக அமைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
Asia’s largest slum & densely populated area like Dharavi has not only shown the World that through collective effort Corona can be controlled but has also made a name for itself globally as a role model in the fight against Corona said the Hon’ble CM Uddhav Balasaheb Thackeray.
— CMO Maharashtra (@CMOMaharashtra) July 11, 2020
அதில் அவர், “ஆசியாவின் மிகப்பெரிய குடிசை மற்றும் தாராவி போன்ற மக்கள் அடர்த்தியான பகுதிகளில் கூட்டு முயற்சியின் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை உலகுக்குக் காட்டியது மட்டுமல்லாமல், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.