கொரோனாவை வென்றதற்காக WHO விடமிருந்து பாராட்டுகளை பெற்ற ஆசியாவில் பெரிய குடிசை பகுதி “தாராவி”!
கொரோனா வைரஸின் பாதிப்பை குறைத்து காட்டிய ஆசியாவின் பெரிய குடிசை பகுதியான தாராவி, உலக சுகாதார அமைப்பிடம் பாராட்டுகளைப் பெற்றது.
கொரோனா வைரஸின் தாக்குதல் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேவருகிறது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக, மஹாராஷ்டிராவில் தான் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது.
அம்மாநில தலைநகரான மும்பையிலுள்ள மிக பெரிய குடிசை குடியிருப்பு பகுதி தான் தாராவி. அங்கு முதல் கொரோனா தொற்று உறுதியான பொது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. அதற்க்கு முக்கியமான காரணம், அந்த பகுதி மிகவும் நெருக்கமான பகுதியாகும்.
அங்கு கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக பின்பற்றினார்கள். அதன்காரணமாக, நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 18 ஆக சரிந்தது.
தற்பொழுது அந்த எண்ணிக்கையும் முறியடித்து, அதற்கும் கீழான எண்ணிக்கையே காணப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 1 முதல் 12 வரையிலான தொற்றுகளே உறுதிசெய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, நெருக்கமான குடிசை குடியிருப்பில் வாழ்ந்தாலும், கொரோனாவுக்கு எதிராக அதிகம் போராடி ஜெயித்துள்ளதால், உலக சுகாதார அமைப்பு “தாராவிகர்கள்” என அந்த பகுதி மக்களை புகழ்ந்து வருகிறது.