மீண்டும் தொடங்கும் பேச்சுவார்த்தை.? புத்துயிர் பெறுமா தனுஷ்கோடி – தலைமன்னார் கடல்வழி பாதை…

Dhanushkodi to Thalai mannar

1914ஆம் ஆண்டு முதல் தமிழக கடல் பகுதியான தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரையில் கடல்வழி மார்க்கமாக வணிக போக்குவரத்து தொடங்கப்பட்டு, 1964 வரையில் நீடித்தது. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல்  காரணமாக தனுஷ்கோடி சிதைந்தது. இதனால் கடல்வழி போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் பல்வேறு முறை மீண்டும் தனுஷ்கோடி – தலைமன்னார் வரையில் கடல்வழி போக்குவரத்து துவங்கவும், அல்லது 23 கிமீ தூரத்தை இணைக்க பாலம் அமைக்கவும் பேச்சுவார்த்தையை இந்திய அரசு தொடங்கியது. ஆனால் இலங்கை அரசு அதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வந்தது.

அயர்லாந்தை தாக்கிய இஷா புயல்: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

அப்போது இருந்த இலங்கை பொருளாதாரமும், கொரோனாவுக்கு பின்னர் பல்வேறு அரசியல் மாற்றங்களை பெற்றுள்ள இலங்கை பொருளாதார நிலைமையும் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையில் உள்ள 23 கி.மீ தூரம் கடல்வழி பாலம் குறித்த திட்டத்தை இலங்கை அரசு யோசிக்க வைத்துள்ளது.

தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 23 கி.மீ கடல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தரைவழிப்பாலம் அமைக்க இலங்கை அரசும் ஒப்புதல் அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரை மொத்தம் 13 மணல் திட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும் 1 கிமீ இடைவெளியில் உள்ளன. இதில் மணல் திட்டுகள் 6 இந்தியாவுக்கும் மீதமுள்ளவை இலங்கைகும் சொந்தமானவை. இந்த பகுதி முழுவதும் ஆழம் மிகவும் குறைவானதாகும். இந்த மணல் திட்டுகள் மீது பாலம் அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்