ஜார்கண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தில் கட்டிடத்தில் இருந்த14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இறந்தவர்களில் 10 பெண்கள் உட்பட 3 குழந்தைகள் அடங்குவர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தன்பாத் துணை ஆணையர் சந்தீப் சிங் கூறுகையில், தன்பாத்தில் உள்ள ஆஷிர்வாத் டவரின் இரண்டாவது மாடியில் மாலை 6 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 14 பேர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார். தீயை அணைக்க சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கட்டிடத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஹேமந்த் சோரன்,”தன்பாத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…