கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவது அவசியம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் கொரோனா காரணமாக இந்த வருடம், குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கட்டுப்பாடுகளுடன் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவது அவசியம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…