ராமர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கிபக்தர்கள் பலர் காயம்!
வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று ஜனவரி 22 (திங்கட்கிழமை) வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
ஆனால், நேற்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ராமர் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டு போகலாம் என்று எண்ணி மக்கள் குளிர் இரவு என்று பார்க்காமல் நேற்று காத்திருந்தார்கள். இதனையடுத்து, இன்று பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தியா முழுவதும் தீபாவளி போல கொண்டப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழா..!
ஏராளமான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருக்கிறார்கள். அலைகடல் போல் கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில், பக்தர்கள் காத்திருந்தார்கள். பின் வரிசையாக பக்தர்களை காவல்துறையினர் கோவிலுக்குள் அனுப்பி வைத்தனர்.
அப்போது கூட்டம் அதிகமான காரணத்தால் அங்கு கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயமடைந்தனர். காயமடைந்த அந்த பக்தர்களை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பான முறையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யவில்லை என கூறப்படுகிறது.