திருப்பதியில் 1 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து சாப்பிடும் பக்தர்கள்.!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு. கொரோனோ வைரஸை தடுக்க மத்திய ,மாநில அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரசால் நேற்று வரை 151 பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.இந்நிலையில் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க திருப்பதி தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாதுகாப்பு நடவைக்கையாக பக்தர்கள் தங்கும் அறையில் காத்திருக்காமல் நேரடியாக தரிசனத்துக்கு அனுமதித்து வருகிறார்கள்.முன்பு ஒரே நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ஒரு மீட்டர் இடைவெளியில் 500 பக்தர்களுக்கு மட்டுமே அமர்ந்து சாப்பிடக்கூடிய அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.