சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை! – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
பாம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
சமரிமலையில் பாம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சன்னிதானத்திற்கு சரக்கு ஏற்றி வரும் டிராக்டர்கள் கண்காணிக்கப்படும். மகரவிளக்கு பூஜையோ மற்றும் மகரஜோதி தரிசனத்தின்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலும், தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.