மகாராஷ்டிராவின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்.
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி அங்கு 50-50 என்ற கணக்கில் ஆட்சி நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சியமைக்க தீவிரம்காட்டி வந்தது.தொடர்ந்து குழப்பமே நீடித்து வந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதற்கு இடையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது .ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் வெற்றி கிடைக்காத நிலையில் தொடர்ந்து குழப்பமே நிலவி வந்தது.
இந்த நிலையினில் இன்று மகாராஷ்டிராவின் முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.மேலும் துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்றுள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பமாக பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.இருவருக்கும் ஆளுநர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…