மகாராஷ்டிராவில் நிலையான அரசை தருவோம் – தேவேந்திர பட்னாவிஸ்
மகாராஷ்டிராவில் நிலையான அரசை தருவோம் என்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.பட்நாவிஸை தொடர்ந்து துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவியேற்றார்.
இதன் பின்னர் முதலமைச்சராக பதவியேற்ற பின் கட்சிகளிடையே தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், மகாராஷ்டிராவில் நிலையான அரசை தருவோம் .அடுத்த 5 ஆண்டுகளில் இந்த அரசு முழு பலத்துடன் செயல்பட்டு மன்னர் சிவாஜி, அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.