Categories: இந்தியா

சரத் பவார் இந்த அளவிற்கு இறங்கி பேசுவாரா ..? : தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம்..!

Published by
Dinasuvadu desk
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 5 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமரை கொல்ல சதி நடப்பதாக கூறி பாஜக அனுதாபம் தேடுகிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களிடையே தற்போது அக்கட்சிக்கு மதிப்பும், செல்வாக்கும் குறைந்து வருவதாகவும், அதன் காரணமாக இத்தகைய கொலை மிரட்டல் கடிதங்களை வைத்து அனுதாபம் தேட பாஜக முயற்சிப்பதாகவும் பவார் கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பிரதமர் மோடியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்திய போலீசார் திரட்டிய தகவல்களை சரத் பவார் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சியின் தலைவர் அல்ல, நமது நாட்டின் தலைவராக இருக்கிறார். சரத் பவார் இந்த அளவிற்கு இறங்கி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. காவல்துறையிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. உண்மை விரைவில் வெளியாகும்’ என பட்னாவிஸ் டுவிட்டரில் கூறியுள்ளார்

Published by
Dinasuvadu desk

Recent Posts

“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.  பெரியார் குறித்து…

11 minutes ago

“நான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பேன்”…ஜோ பைடன் பேச்சு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…

38 minutes ago

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

2 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…

2 hours ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…

3 hours ago

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

12 hours ago