மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட நிலையில், பெரும்பான்மை இல்லாததால் தேவேந்திர பட்னாவிசு ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி முன்பதவியேற்றனர்.
இதனால் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும் சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான நடைபெற்ற விசாரணையில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.அதாவது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இவரை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், போதிய பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.மேலும் பாஜக-சிவசேனா கூட்டணிக்கே மகாராஷ்டிர மக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகளில் மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு கிடைத்தது.இடங்களின் எண்ணிக்கையை பார்த்த பிறகு பேரம் பேசத்தொடங்கியது சிவசேனா .சுழற்சி முறையில் முதல்வர் என எந்த வாக்குறுதியும் சிவசேனாவிற்கு அளிக்கப்படவில்லை.மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் அளவு பாஜகவுக்கு இடங்கள் இல்லை என தெரிந்த பின் சிவசேனா முதல்வர் பதவி கேட்டது என்று விளக்கம் அளித்தார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…