மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ்… துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே-அஜித் பவார் பதவியேற்பு.!
பதவியேற்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
டெல்லி : மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகிய இருவரும் பதவியேற்றுக்கொண்டனர்.
மும்பையில் நடந்த இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் ஷாருக் கான், சல்மான் கான், சன்ஞய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.
மேலும், இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சுமார் 4,000 பேர் கலந்துக் கொண்டனர். தேர்தல் முடிவு வெளியாகி 12 நாள்களுக்குப்பின் அங்கு புதிய அரசு அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது. பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.