சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவமபர் 16-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, அடுத்த நாளான நவம்பர் 17 கார்த்திகை 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அன்றிலிருந்து சரியாக 41 நாள் கழித்து கடந்த டிசம்பர் 27, மார்கழி மாதம் 11ஆம் தேதி அன்று மண்டல பூஜைவிழா கோலாகலமாக நடைபெற்றது. மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 11 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது டிசம்பர் 30 திறக்கப்பட்டது.
இந்நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கு சுமுகமான மற்றும் பாதுகாப்பான தரிசன வசதியை ஏற்படுத்த வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் முறை நிறுத்தப்படுகிறது என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. வரும் 14-ஆம் தேதி முன்பதிவு வரம்பு 50,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் எனவும் மகரவிளக்கு தினமான ஜனவரி 15-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்திற்கு 40,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு வரும் 14-ம் மற்றும் 15-ம் தேதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நாட்களில் குழந்தைகள் சபரிமலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறியுள்ளார். வழக்கமாக மகரவிளக்குக்கு மூன்று நாட்களுக்கு முன் வரும் ஐயப்ப பக்தர்கள், மகரவிளக்கு மற்றும் திருவாபரனை தரிசனம் செய்ய சன்னிதானம் செல்லாமல் சபரிமலையில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு வருகின்றனர்.
மீண்டும் ஐயப்ப தரிசனத்திற்காக அதிக பக்தர்கள் மலை ஏறினால், பாதுகாப்பு மற்றும் சுமூக தரிசன வசதி பாதிக்கும். இதனால், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பான தரிசனம் அளிக்கும் வகையில் ஸ்பாட் புக்கிங்கை தவிர்க்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்தார். 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அதிக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…