தேவாஸ் நிறுவன வழக்கு! இழப்பீடு வழங்க கோரி நாசாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
பெங்களூரை சேர்ந்த தேவாஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க கோரி, இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு, இஸ்ரோவின் முன்னாள் அதிகாரிகள் சிலரும் மற்றும் அமெரிக்க தொழிலதிபர்கள் சிலரும் சேர்ந்து ஆரம்பித்தது தான் இந்த தேவாஸ் புத்தாக்க நிறுவனம். மொபைல் போன் நிறுவனங்களுக்கு மல்டிமீடியா சேவையை வழங்குவது தான் இந்த நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.
இதற்காக தேவாஸ் நிறுவனம், 2005-ம் ஆண்டு இஸ்ரோவின் இரண்டு செயற்கை கோள்களை குத்தகைக்கு எடுக்க ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தமானது, இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸுடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தால், 70 மெஹா ஹெட்ஸ் எஸ் பங்க் அலைவரிசையை, தேவாஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டி வரும் என்றும், இது பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் அலைவரிசை என்பதால் வழங்க முடியாது என்றும் ஆண்ட்ரிக்ஸ் தெரிவித்துள்ளதோடு, ஒப்பந்தத்தை 2011-ம் ஆண்டு ரத்து செய்தது.
இதனையடுத்து தேவாஸ் நிறுவனம், இந்த நடவடிக்கையை எதிர்த்தும், பின்னர் இழப்பீடு கோரியும் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சர்வதேச தீர்ப்பாயங்களிலும் சட்ட போராட்டத்தை நடத்தியது. இந்நிலையில், தேவாஸின் கோரிக்கையை ஏற்ற அமெரிக்க நீதிமன்றம், அண்ட்ரிக்ஸ் நிறுவனம் ரூ.9 ஆயிரம் கோடி இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டுள்ளது.
தேவாஸ் – அண்ட்ரிக்ஸ் ஒப்பந்தத்தில், ரூ.578 கோடி ரூபாய் ஊழல்கள் நடந்ததாகவும், அந்நிய செலவாணி முறைகேடுகள் நடந்ததாகவும், புகார்கள் எழுந்தது.
இதுதொடர்பாக, தேவாஸ் நிர்வாக குழு தலைவராக இருந்தவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான மாதவன் நாயக் மீது சிபிஐ-ம், அமலாக்கத்துறையும் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேவாஸுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்த புகார்களும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.