சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகா ஹாசன் தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்பியும், அதே தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் பதியப்பட்டுள்ளன. தற்போது வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வலை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல, மஜத மூத்த தலைவர் எச்.டி.ரேவண்ணா மீதும் இதே போல பாலியல் குற்றசாட்டுகள் பதியப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
இந்த வழக்கில், பாஜக பிரமுகர் தேவராஜே கவுடாவும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார். அவர் நேற்று ஹாசன் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராக காவல்துறையினர் அழைத்து வந்த போது, இந்த பாலியல் குற்றசாட்டு வழக்கில், பிரதமர் மோடி, எச்.டி.குமாரசாமி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேச வேண்டும் எனவும், பாலியல் வீடீயோக்களை வெளியிட கூறியது குமாரசாமி என்று கூற வேண்டும் என்றும் டி.கே.சிவகுமார் 100 கோடி ரூபாய் பேரம் பேசினார் என்றும் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த விவகாரத்தில், டி.கே.சிவகுமார், என்.சலுவராயசாமி, கிருஷ்ண பைரே கவுடா, பிரியங்க் கார்கே உள்ளிட்டோருக்கும் தொடர்பு உள்ளது என்றும், என்னிடம் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டது. 5 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுப்பதாக கூறினார்கள். நான் அதனை மறுத்துவிட்டேன். அதனால் கைது செய்யப்பட்டுள்ளேன். நான் வெளியே வந்தால், பல உண்மைகள் வெளியே வரும். கர்நாடகாவில் பாஜக ஆட்சி கவிழும் என்றும் பாஜக பிரமுகர் தேவராஜே கவுடா தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…