திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!
திருப்பதி பெருமாள் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சார்ந்த பெண் உட்பட ஆறு பேர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டவுடன் நேற்று இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.
அப்பொழுது, இரவு 8 மணிக்கு உடல்நிலை சரியில்லாத பக்தரை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்துள்ளனர். இதைக்கண்ட பக்தர்கள் முண்டியடித்து உள்ளே நுழைய முயன்றதால், 2 இடங்களில் நெரிசல் ஏற்பட்டு 1 தமிழர் உள்பட 6 பேர் பலியாகினர்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரில், ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உட்பட 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிகாரிகளின் அலட்சியமே இச்சம்பவத்திற்கு காரணம் என கோயில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
உயிரிழந்தவர்களின் விவரங்கள்
- எஸ்.லாவண்யா (38)
- மல்லிகா (50)
- புத்தேடி நாயுடு பாபு (55)
- கண்டிப்பள்ளி சாந்தி (33)
- ஜி.ரஜினி (47)
- வி.நிர்மலா (55)
திருப்பதி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு!#Tirupati | #Stampede | #SalemDevotee pic.twitter.com/5KWcZqi4m5
— Dinasuvadu (@Dinasuvadu) January 9, 2025