திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

திருப்பதி பெருமாள் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சார்ந்த பெண் உட்பட ஆறு பேர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

Tirupati

ஆந்திரப் பிரதேசம்:  ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டவுடன் நேற்று இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.

அப்பொழுது, இரவு 8 மணிக்கு உடல்நிலை சரியில்லாத பக்தரை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்துள்ளனர். இதைக்கண்ட பக்தர்கள் முண்டியடித்து உள்ளே நுழைய முயன்றதால், 2 இடங்களில் நெரிசல் ஏற்பட்டு 1 தமிழர் உள்பட 6 பேர் பலியாகினர்.

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரில், ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உட்பட 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிகாரிகளின் அலட்சியமே இச்சம்பவத்திற்கு காரணம் என கோயில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

உயிரிழந்தவர்களின் விவரங்கள்

  1. எஸ்.லாவண்யா (38)
  2. மல்லிகா (50)
  3. புத்தேடி நாயுடு பாபு (55)
  4. கண்டிப்பள்ளி சாந்தி (33)
  5. ஜி.ரஜினி (47)
  6. வி.நிர்மலா (55)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
UP CM Yogi adityanath
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains