Categories: இந்தியா

2014, 2019, 2024 தேர்தல் பிரமாண பத்திரங்களும்… பிரதமர் மோடியின் சொத்து விவரமும்..

Published by
மணிகண்டன்

சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன.

இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்கள், தங்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட என அனைத்து தகவல்களையும் பிரமாண பத்திரமாக தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சமர்ப்பிக்க வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் பொதுதளத்தில் வெளியிடப்படும். அவ்வாறு பிரதமர் நரேந்திர மோடியின் 2014, 2019, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரமாண பத்திர விவரங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

2014இல் சொத்து மதிப்பு விவரங்கள்…

ரொக்க பணம் – 37,500 ரூபாய்.

வங்கி கணக்கில் – 58,54,383 ரூபாய்.

4 தங்க மோதிரங்கள் – 1,35,000 ரூபாய் (தோராயமாக).

இதர முதலீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் மொத்தம் – 65 லட்சத்து 91 ஆயிரத்து 582 ரூபாய்.

அசையும் சொத்துக்கள் : 

குஜராத் மாநிலம் காந்திநகரில் 3593 சதுரஅடி நிலத்தில் 169.81 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வீட்டின் அப்போதைய (2014) தோராய சந்தை மதிப்பு – 1 கோடி ரூபாய்.

2024இல் சொத்து மதிப்பு விவரங்கள்…

ரொக்க பணம் – 52,920 ரூபாய்.

வங்கி கணக்கில் இருப்பு – 2,85,60,338 ரூபாய்.

4 தங்க மோதிரங்கள் – 2,67,750 ரூபாய் (தோராயமாக).

இதர முதலீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் மொத்தம் – 3 கோடியே 2லட்சத்து 6 ஆயிரத்து 889 ரூபாய்.

அசையா சொத்துக்களான, வீடு, நிலம், வாகனங்கள் என எதுவும் இல்லை.

2019இல் சொத்து மதிப்பு விவரங்கள்…

மொத்த சொத்து மதிப்பு – 2.51 கோடி ரூபாய்.

(தேர்தல் ஆணைய தளத்தில் விரிவான தகவல்கள் கிடைக்க பெறவில்லை)

2014, 2019, 2024 பொதுத்தேர்தல் வேட்புமனுக்களில் எந்தவித குற்றவியல் வழக்குகளும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரமாண பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

2014, 2019 பொது தேர்தல்களில் வெற்றிபெற்ற உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் தான் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

3 minutes ago

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…

29 minutes ago

வீர தீர சூரன் இப்படி தான் இருக்கும்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…

50 minutes ago

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…

1 hour ago

டிஜிட்டல் முறையில் பார்க்கிங் வசதி…சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் அறிவிப்புகள்!

சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…

2 hours ago

“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும்…

3 hours ago