2014, 2019, 2024 தேர்தல் பிரமாண பத்திரங்களும்… பிரதமர் மோடியின் சொத்து விவரமும்..

PM Narendra Modi

சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன.

இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்கள், தங்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட என அனைத்து தகவல்களையும் பிரமாண பத்திரமாக தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சமர்ப்பிக்க வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் பொதுதளத்தில் வெளியிடப்படும். அவ்வாறு பிரதமர் நரேந்திர மோடியின் 2014, 2019, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரமாண பத்திர விவரங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

2014இல் சொத்து மதிப்பு விவரங்கள்…

ரொக்க பணம் – 37,500 ரூபாய்.

வங்கி கணக்கில் – 58,54,383 ரூபாய்.

4 தங்க மோதிரங்கள் – 1,35,000 ரூபாய் (தோராயமாக).

இதர முதலீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் மொத்தம் – 65 லட்சத்து 91 ஆயிரத்து 582 ரூபாய்.

அசையும் சொத்துக்கள் : 

குஜராத் மாநிலம் காந்திநகரில் 3593 சதுரஅடி நிலத்தில் 169.81 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வீட்டின் அப்போதைய (2014) தோராய சந்தை மதிப்பு – 1 கோடி ரூபாய்.

2024இல் சொத்து மதிப்பு விவரங்கள்…

ரொக்க பணம் – 52,920 ரூபாய்.

வங்கி கணக்கில் இருப்பு – 2,85,60,338 ரூபாய்.

4 தங்க மோதிரங்கள் – 2,67,750 ரூபாய் (தோராயமாக).

இதர முதலீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் மொத்தம் – 3 கோடியே 2லட்சத்து 6 ஆயிரத்து 889 ரூபாய்.

அசையா சொத்துக்களான, வீடு, நிலம், வாகனங்கள் என எதுவும் இல்லை.

2019இல் சொத்து மதிப்பு விவரங்கள்…

மொத்த சொத்து மதிப்பு – 2.51 கோடி ரூபாய்.

(தேர்தல் ஆணைய தளத்தில் விரிவான தகவல்கள் கிடைக்க பெறவில்லை)

2014, 2019, 2024 பொதுத்தேர்தல் வேட்புமனுக்களில் எந்தவித குற்றவியல் வழக்குகளும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரமாண பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

2014, 2019 பொது தேர்தல்களில் வெற்றிபெற்ற உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் தான் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்