இந்தியர்களை மீட்க இயக்கப்படும் 64 சிறப்பு விமானங்களின் விபரங்கள்.!
வெளிநாடுகளில் இந்தியர்களை மீட்க மே 7 முதல் 13 வரை 64 சிறப்பு விமானங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் 36,65,403 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 12,06,314 பேர் மீண்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 25,2,944 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு வர முடியாமல் பல நாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, ஓமன், ஆகிய 12 நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர மே 7 முதல் 13 வரை 64 சிறப்பு விமானங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விமானங்கள் ஒரு வாரம் இயங்க உள்ளது. இதற்கான பட்டியலையும் மத்திய அரசு தயாரித்து வெளிட்டு உள்ளது. தொடர்ந்து மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களும் அழைத்து வரப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது.
நாளை மறுநாள் முதல் மே 13 ஆம் தேதி வரை வெளிநாட்டிலிருந்து மொத்தம் 11 சிறப்பு விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்பட உள்ளன.