சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 போதைப் பொருள் விற்பனையாளர்கள் பற்றிய விவரங்கள்.!
சுஷாந்த் சிங் மரணத்தில் போதை மருந்து தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வரும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார், இது தொடர்பாக ஒரு ஆட்டோ ஓட்டுநர், ஒரு உணவக உரிமையாளர் உட்பட 6 பேரைக் கைது செய்துள்ளனர். சமீர் வான்கடே தலைமையிலான மும்பை மண்டலக் குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டது. கைது செய்யப்பட்டவர்கள் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் மேஜிஸ்திரேட் முன்பு ஒப்படைக்கப்படுவார்கள்.
இதையடுத்து, கரஞீத் சிங் ஆனந்த், ட்வைன் ஃபெர்னாண்டஸ், சங்கேத் படேல், அங்குஷ் அன்ரேஜா, சந்தீப் குப்தா மற்றும் அஃப்தாப் ஃபதே அன்சாரி ஆகிய 6 பேருமே போதை மருந்து கை மாற்றுபவர்கள் என்று போதை மருந்து தடுப்புப் பிரிவின் துணை இயக்குநர் கேபிஎஸ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இதில் சிலர் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷௌவிக் சக்ரபர்த்தி உள்ளிட்ட சிலர் மூலம் சுஷாந்துக்கு போதை மருந்து விற்பனை செய்திருக்கின்றனர்.
கரம்ஜீத் சிங் ஆனந்த்: 23 வயதான இவர், மும்பையில் போதை மருந்து விற்பவர். பாலிவுட் தொலைக்காட்சி நடிகர்களுக்கு போதைப் பொருட்கள் விநியோகம் செய்துள்ளார். இவரிடமிருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சங்கேத் படேல்: போதைப்பொருள் விநியோகத்தில் ஆனந்தின் கூட்டாளி. பல்வேறு பிரபலங்களுக்கு இவர் போதை மருந்து கொண்டு போய் கொடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. கரம்ஜீத்தின் அறிவுறுத்தலின் படி பிரபலங்களுக்கு அவர் மருந்துகளை வழங்குவார்.
சந்தீப் குப்தா: இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநராக இருந்தாலும், ஃபெர்ணாண்டஸ் போன்ற போதை மருந்து விற்பனையாளர்களிடம் போதை மருந்துகளை மொத்த அளவில் கொண்டு வந்து சேர்ப்பது. சில்லறை விற்பனையாளர்களுக்கு மொத்தமாக (கஞ்சா) வழங்குவார்.
அப்தாப் ஃபதே அன்சாரி: இவர் ஆட்டோ டிரைவர் சந்தீப்பின் கூட்டாளி. குப்தாவுக்காக போதை மருந்துகளை மொத்தமாக வாங்கித் தந்தவர். குப்தா இந்த போதை வஸ்துக்களை தனது குழுவின் மூலம் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குவார்.
டுவைன் பெர்னாண்டஸ்: மும்பையில் இவர் மருந்துகளின் சில்லறை விற்பனையாளர். ஷோயிக் சக்ரவர்த்தியின் நண்பர். மரிஜுவானாவை விற்கவும், சிறிய அளவில் வழங்கவும் பயன்படுகிறார். சுஷாந்துக்குத் தேவையான போதை மருந்துகளை விநியோகித்தவர். இவரிடம் கிட்டத்தட்ட அரை கிலோ போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.
அன்குஷ் அரஞ்சா: இவர் மும்பையில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உணவகம் வைத்திருப்பவர். அங்கூஷ் உள்ளூர் போதைப்பொருள் வியாபாரி. அவர் மருந்துகளை வாங்கி பின்னர் மும்பையில் பல பெரிய இடத்து வாடிக்கையாளர்களுக்குப் போதை மருந்துகளை விற்றிருக்கிறார். தான் விற்கத் தேவையான போதை மருந்துகளை ஆனந்த மற்றும் படேலிடம் வாங்கியிருக்கிறார். இவரிடம் 42 கிராம் போதைப் பொருளும், ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…