பாஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்கள்.!
ஜம்மு காஷ்மீர் பாஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பாஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம், இந்த தாக்குதலில் உயிரிழந்த கணவனின் உடல் அருகே மனைவி சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது. மறு பக்கம், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா பதிலடி தாக்குதல் நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.
லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது, இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்களை ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பட்டியல்
- சுஷில் நாத்யால்
- சையத் அதில் ஹுசைன் ஷா
- ஹேமந்த் சுஹாஸ் ஜோஷி
- வினய் நர்வால்
- அதுல் ஸ்ரீகாந்த் மோனி
- நீரஜ் உதவானி
- பிடன் அதிகாரி
- சுதீப் நியூபேன் (நேபாளம்)
- சுபம் திவேதி
- பிரசாந்த் குமார் சத்பதி
- மனீஷ் ரஞ்சன் (வரி ஆய்வாளர்)
- என். ராமச்சந்திரன்
- சஞ்ஜய் லக்ஷ்மண் லாலி
- தினேஷ் அகர்வால்
- சமீர் குஹர்
- திலீப் தசாலி
- ஜே. சச்சந்திர மோலி
- மதுசூதன் சோமிசெட்டி
- சந்தோஷ் ஜக்தா
- மஞ்சு நாத் ராவ்
- கஸ்துபா கன்வோடே
- பாரத் பூஷண்
- சுமித் பர்மர்
- யதேஷ் பர்மர்
- தகேஹால்யிங் (விமானப்படை ஊழியர்)
- ஷைலேஷ்பாய் எச். ஹிம்மத்பாய் கலதியா
காயமடைந்தவர்களின் பட்டியல்
- தோபி வினோ பா
- டாக்டர். பரமேஸ்வர்
- ஷஷி குமாரி நாயக்
- சந்தனோ சங்கரம்
- சோபேதே பாட்டீல்
- வினய் பாய்
- மணிக் பாட்டீல்
- ரேணு பாண்டே
- பாலசந்துரு
- அப்ஜயா எம். ராவ்
- அகன்ஷா
- லக்ஷிதா தாஸ்
- ஜென்னிஃபர்
- ஜெயா மிஸ்ரா
- ஷபரிகுஹா
- ஹர்ஷா ஜெய்ன்
- நிகிதா ஜெய்ன்