படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்.! பதறும் இந்திய விவசாயிகள்

Published by
மணிகண்டன்

உணவு பயிர்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் என எச்சரிக்கை ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பயிர்களை சேதப்படுத்தி பெரும் உணவு தட்டுப்பாடு பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியினங்களாக அறியப்படுகிறது பாலைவன வெட்டுக்கிளிகள். இந்த பேரழிவு பூச்சிகள் தற்போது கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் பெரும் உணவு தட்டுப்பாடை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் மட்டும் அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி பேர் உணவு தட்டுபாட்டால் பாதிக்கப்பட உள்ளனர் என ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த  பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதங்களில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் நாடுகள்தான் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த பேரழிவு பூச்சிகளை அழிக்க உலக நாடுகள் இணைந்து 15 கோடியே 30 லட்சம் டாலர் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த பேரழிவு பூச்சியினத்தை அழிக்க இந்திய அரசானது, பாகிஸ்தான் மற்றும் ஈரானுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அழைத்தது. இதனை ஈரான் ஏற்றுக்கொண்டாலும், பாகிஸ்தான் அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. 

இந்த பேரழிவு பூச்சிகளான பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் விளையும் பயிர்களை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளதால், அம்மாநில அரசு சிறிய ரக விமானம் மூலம் மருந்து தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. 

Published by
மணிகண்டன்

Recent Posts

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுக அரசு குறித்த தீர்மானங்கள் என்னென்ன?

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுக அரசு குறித்த தீர்மானங்கள் என்னென்ன?

சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…

1 hour ago

“மதுக்கடைகளை மூட வேண்டும்” தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…

3 hours ago

இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

4 hours ago

IND vs NZ : தொடரும் தோல்வி! இந்தியாவை வொயிட்-வாஷ் செய்த நியூசிலாந்து அணி!

மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…

4 hours ago

சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. “கங்குவா” சிறப்பு காட்சி உண்டு.! எங்கு தெரியுமா?

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…

5 hours ago

சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள் – போக்குவரத்து நெரிசல்!

சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி…

6 hours ago