ராகுல் காந்தியை தொடர்ந்து கீழே விழுந்த டெரிக் ஓ பிரெய்ன்

ஹத்தாரஸ் செல்ல முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரெய்ன் போலீசார் தடுத்தபோது கீழே விழுந்துவிட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஹத்தாரஸ் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற போது போலீசார் தடுத்தபோது ராகுல்காந்தி கீழே விழுந்தார்.இந்த சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.இதன் பின் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு சந்தித்து ஆறுதல் கூற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள் சிலர் இன்று ஹத்தாரஸ் சென்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். டெரிக் ஓ பிரையன் தடையை மீறி நடந்து சென்றபோது அவரை போலீசார் தடுத்தபோது கீழே விழுந்தார்.இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
லேட்டஸ்ட் செய்திகள்
மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!
February 27, 2025
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025