தேசிய கீதம் பாடி போராட்டத்தை கலைத்த துணை கமிஷனர்.!
- பெங்களூருவின் டவுன்ஹால் பகுதியில் குடியுரிமை திருத்த மசோதாஎதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
- துணை கமிஷனர் சேத்தன் சிங் ரத்தோர் மைக் மூலம் தேசிய கீத பாடல் பாடினார். உடனே அமர்ந்திருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால் அதையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதனால் டெல்லி போன்ற பல்வேறு இடங்களிலும் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக பெங்களூருவின் டவுன்ஹால் பகுதியில் போராட்டம்நடைபெற்றது.போரட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பெங்களூரு மத்திய போலீஸ் துணை கமிஷனர் சேத்தன் சிங் ரத்தோர் போராட்டக்காரர்களை அமைதியாக செல்லும்படி அவர் கூறினார். மேலும் சில சமூக விரோதிகள் சுயநலத்திற்காக போராட்டத்தில் கலந்து கொண்டு வன்முறையை தூண்டுவர் என கூறினார்.
ஆனால் போராட்டக்காரர்கள் அவர் கூறுவதை கேட்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது துணை கமிஷனர் சேத்தன் சிங் மைக் மூலம் தேசிய கீத பாடல் பாடினார். தேசிய கீத பாடல் பாடுவதற்கு முன் வரை அமர்ந்திருந்த போராட்டக்காரர்கள் தேசிய கீத பாடல் பாடியதும் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர்.
பின்னர்போராட்டக்காரர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். சேத்தன் சிங்கின் இந்த செயலுக்கு பலர் பாராட்டி வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.