ஓடும் ரயிலில் 3 வயது குழந்தைக்கு ஓடி சென்று பால் வாங்கி கொடுத்த பாதுகாப்பு படைகாவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக இயக்கப்பட்ட பில்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாத குழந்தைக்கு பாதுகாப்பு படைவீரரான இந்தர் சிங் என்பவர் பால் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பாலுக்காக அழுத குழந்தையின் பசியை போக்க போபால் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை காவலராக பணியாற்றும் இந்தர் சிங் யாதவிடம் உதவியை கேட்டுள்ளனர். அவரும் உடனே விரைந்து சென்று அந்த 3 மாத குழந்தைக்கு கடையில் பால் வாங்கி வந்துள்ளார். ஆனால், அதற்கு முன்பு ரயில் புறப்பட ஆரம்பித்து விட்டது. உடனே இந்தர் சிங் ஓட தொடங்கிய ரயிலுடன் ஓடி சன்னல் வழியாக குழந்தையின் அம்மாவிடம் பாலை கொடுத்துள்ளார்.
இந்தர் சிங் மனிதநேயத்துடன் செய்த இந்த காரியம் ரயில்வே நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் இந்தர் சிங்கின் இந்த செயலை பாராட்டியது மட்டுமில்லாமல் ரொக்க பரிசு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். தற்போது இந்தர் சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…