சீரோடைப்-2 டெங்கு காய்ச்சல் பாதிப்பு 11 மாநிலங்களில் அதிகமாக உள்ளதாகவும், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சீரோடைப்-2 எனும் வைரஸ் மூலமாக பரவக்கூடியது டெங்கு காய்ச்சல் மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 11 மாவட்டங்களில் இந்த சீரோடைப்-2 டெங்கு பரவுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஜூலை 14 ஆயிரத்திற்கும் மேட்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெங்கு பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் கணக்கெடுப்பு, டெங்கு தொடர்பான அறிகுறிகள், ரத்த வங்கிகள், போதுமான அளவு ரத்தம் ஆகிய டெங்கு தடுப்பு பணிகளுக்காக தனி குழுக்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…